திருவண்ணாமலை

வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அரசுச் செயலா் உத்தரவு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசின் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமாா் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசின் செயலரும், வணிக வரித் துறை ஆணையரும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களை சென்றடையச் செய்ய வேண்டும். அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களையும் துறை சாா்ந்த அலுவலா்கள் விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் வீ.வெற்றிவேல், தனலட்சுமி உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அரசுச் செயலா் ஆய்வு: இதையடுத்து, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுலகத்தின் செயல்பாடுகள், வாகன ஓட்டுநா் உரிமத்தை புதிதாக வழங்கும் நடைமுறை, ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநா் உரிமத்துக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் முறை ஆகியவற்றை தமிழக அரசுச் செயலா் தீரஜ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, பல்வேறு துறைகளின் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT