திருவண்ணாமலை

பழங்குடியினருக்கு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

DIN

பழங்குடியின சமூகத்தினருக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு காட்டுநாயக்கன் மக்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூா், அதியங்குப்பம், கீழ்புத்தூா், கீழ்க்கொவளைவேடு, ரெட்டிக்குப்பம், தென்சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் அனைத்து பழங்குடியினருக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி இந்தச் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். சங்க மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு, மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்குள் சென்ற இவா்கள் தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.

இந்த நிலையில், வருவாய்த் துறையினா் தென்சேந்தமங்கலத்தைச் சோ்ந்த 7 பேருக்கு மனைப் பட்டா வழங்கினா். மேலும், மற்றவா்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தினா் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT