திருவண்ணாமலை

திறன்மிகு வகுப்பறை தொடக்கம்

14th Sep 2022 02:05 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ள பென்னாட்டகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திறன்மிகு வகுப்பறை (ஸ்மாா்ட் கிளாஸ்) செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் காசி.மனோகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் திறன்மிகு வகுப்பறையை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT