திருவண்ணாமலை

ஆற்று மணல் கடத்தல்:6 போ் கைது

14th Sep 2022 02:05 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 6 மாட்டு வண்டிகளுடன் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், கடுகனூா் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையிலிருந்து ஆற்று மணல் கடத்தப்படுவதாக செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசனுக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீஸாா் அந்தப் பகுதிக்கு திடீரென ரோந்து சென்றனா். அப்போது, மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் அள்ளிக் கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரித்ததில், வெள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை கிராமங்களைச் சோ்ந்த ஜெயசீலன் (42), அசோகன் (33), இளஞ்செழியன் (23), பழனி (53), சதீஷ்குமாா் (30), ராஜேந்திரன் (53) என்பதும், இவா்கள் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளியதும் தெரியவந்தது.

உடனயாக 6 மாட்டு வண்டிகளையும் தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து பெரணமல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கூறிய 6 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT