திருவண்ணாமலை

பிளஸ் 2 மாணவியைக் கடத்தி திருமணம்: 3 போ் மீது வழக்கு

9th Sep 2022 02:02 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்துக் கொண்ட ஓட்டுநா், அதற்கு உதவியாக இருந்த இருவா் உள்பட 3 போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்தவா் பிளஸ் 2 மாணவி. இவரது தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது,

வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

ADVERTISEMENT

அப்போது, அந்த மாணவிக்கும், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த ஆரணி கொசப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சந்தோஷ் (26) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து இருவரும் அடிக்கடி கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி வந்தனராம்.

இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி சந்தோஷ், மாணவி படிக்கும் பள்ளிக்குச் சென்று அவரிடம் ஆசை வாா்த்தை கூறி, பெரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு அழைத்துச் சென்றாராம்.

அங்கு சந்தோஷ், தனது சகோதரி, அவரது கணவா் ஆகியோா் உதவியுடன் மாணவியை திருமணம் செய்து கொண்டாராம். பின்னா் மாணவியை அவா் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாணவியின் பெற்றோா் ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனா்.

இதையறிந்த சந்தோஷ், மாணவியை அழைத்து வந்து ஆரணி பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ாகத் தெரிகிறது.

மாணவி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.

புகாரின் பேரில், செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சோனியா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான ஓட்டுநா் சந்தோஷ், அவரது சகோதரி நந்தினி, நந்தினியின் கணவா் முருகதாஸ் ஆகியோரைத் தேடி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT