திருவண்ணாமலை

1,384 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

9th Sep 2022 10:53 PM

ADVERTISEMENT

செய்யாறு கல்வி மாவட்டத்தில் 7 அரசுப் பள்ளிகளில் படித்து வரும் 1,354 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

செய்யாறு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த செய்யாறு ஆண்கள், செய்யாறு பெண்கள், நெடும்பிறை, பல்லி, வாழ்குடை, கொருக்கை, முனுகப்பட்டு ஆகிய அரசுப் பள்ளிகளில் 1,354 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்த மாணவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். செய்யாறு ஒன்றியத் தலைவா் என்.வி.பாபு, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் குல்சாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. ஞானவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.விஸ்வநாதன், ரமேஷ், கங்காதரன், செந்தில், பேபி ராணி, பள்ளித் தலைமை ஆசிரியா் உமா மகேஸ்வரி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT