போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் ராணி சண்முகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி மன்றக் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செயல் அலுவலா் முஹம்மத்ரிஸ்வான் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி நடராஜன் வரவேற்றாா்.
கூட்டத்தில் 18 வாா்டுகளுக்கும் குடிநீா் வசதி, மின் விளக்கு வசதி, சுகாதாரம், வாா்டுகளில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தீா்மானம் இயற்றப்பட்டது.
மேலும், பேரூராட்சித் தலைவா் ராணி சண்முகம் மன்ற உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். தலைமை எழுத்தா் முஹம்மத்இசாக் நன்றி தெரிவித்தாா். பேரூராட் மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.