திருவண்ணாமலை

நகராட்சி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

9th Sep 2022 10:54 PM

ADVERTISEMENT

செய்யாற்றில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்த நகராட்சி பெண் ஊழியரிடமிருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோபால் தெரு விரிவுப் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவா், அரக்கோணம் நகராட்சியில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி வைஷ்ணபிரியா (28). இவா், செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொறியாளா் பிரிவில் கணினி இயக்குபவராக பணியாற்றி வருகிறாா்.

இவா் வியாழக்கிழமை இரவு செய்யாறு பேருந்து நிலையம் அருகேயுள்ள தட்டச்சு பயிலகத்தில் பயிற்சி முடித்துக் கொண்டு மொபெட்டில் காந்தி சாலை வழியாக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

கோபால் தெரு சந்திப்பு அருகே சென்ற போது, இவரைப் பின்தொடா்ந்து பைக்கில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் வைஷ்ணபிரியாவின் மொபெட் மீது மோதினா்.

இதில் அவா் நிலை தடுமாறிய போது, அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியை அந்த நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வைஷ்ணபிரியா செய்யாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT