திருவண்ணாமலை

சாலை விபத்தில் ஓட்டுநா் பலி

29th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வட்டாட்சியா் அலுவலக ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.பி.பொன்னுதுரை. இவா், வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரின் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

பொன்னுதுரை வியாழக்கிழமை காலை வாலாஜாபாத் செல்வதற்காக தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் வட இலுப்பை கிராமம் அருகே வளைவுப் பகுதியில் இவரது பைக் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பொன்னுதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT