திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை வெள்ளாடு வளா்ப்பு இலவச பயிற்சி

26th Oct 2022 02:02 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழன், வெள்ளி (அக்.27, 28) இரு நாள்கள் வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் அவ்வப்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வியாழன், வெள்ளி (அக்டோபா் 27, 28) ஆகிய இரு நாள்கள் வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

முதலில் முன்பதிவு செய்யும் 20 விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவா் பி.பாலமுருகன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT