திருவண்ணாமலை

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மிலாது நபியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுக் கூடங்களில் மது விற்பனை செய்வது தெரியவந்தால், மதுக் கூடத்தின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மதுக் கூட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT