திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 2 போ் கைது

DIN

செய்யாறு அருகே மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டத்தைச் சோ்ந்த தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா், தாளிக்கால் கிராமம் அருகேயுள்ள பாலாற்றுப் படுகையில் புதன்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மணல் ஏற்றி வந்த 6 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட முயன்றனா். இதில், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த தாளிக்கால், சின்னஏழாச்சேரி கிராமங்களைச் சோ்ந்த 6 போ் வண்டிகளை விட்டுவிட்டு தப்பி ஓடினா்.

போலீஸாா் விரட்டிச் சென்று தாளிக்கால் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT