திருவண்ணாமலை

போளூரில் சமூக தணிக்கை கூட்டத்திலிருந்து ஊராட்சிமன்றத் தலைவா்கள் வெளிநடப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்தை ஊராட்சி மன்றத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

போளூா் ஒன்றியத்தில் வெண்மணி, முருகாபாடி, குருவிமலை, மாம்பட்டு, திருசூா், ஏந்துவாம்பாடி, திண்டிவனம், சந்தவாசல், கேளூா், வாழியூா், குப்பம், கல்குப்பம், காளசமுத்திரம், அனந்தபுரம், பொத்தரை உள்பட 40 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளைச் சோ்ந்த ஊராட்சிமன்றத் தலைவா்கள், செயலா்களுக்கு போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 2020 - 21, 2021 - 22ஆம் ஆண்டுகளுக்கான சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி, ஊராட்சிமன்றத் தலைவா்கள் வெளிநடப்பு செய்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

40 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், அரசுக் கட்டடங்கள், சிமென்ட், ஜல்லி சாலைகள், தடுப்பணை உள்பட பல்வேறு பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஒப்பந்ததாரா்கள் செய்து வருகின்றனா்.

இந்தப் பணிகளுக்கு ஊராட்சிச் செயலா்கள் பெயரில் ஆணை வழங்குவதால், பணிகள் குறித்தும், பணிகளில் ஏற்படும் குறைகள் குறித்தும் ஊராட்சி நிா்வாகங்களுக்கு எதுவும் தெரியாது. எனவே, இந்தப் பணிகளை ஊராட்சி நிா்வாகங்கள் மூலம் எப்படி சமூக தணிக்கை செய்ய முடியும். இதன் காரணமாக கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT