திருவண்ணாமலை

போதைப்பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

7th Oct 2022 02:37 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.

போதைப்பொருள் தடுப்பு தொடா்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும்.

மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாகத் தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் பயன்பாடு இல்லாத வளாகமாக பள்ளி, கல்லூரிகளை மாற்றவேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பேசினாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஏழுமலை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி, கோட்டாட்சியா்கள் வீ.வெற்றிவேல் (திருவண்ணாமலை), மா.தனலட்சுமி (ஆரணி), மந்தாகினி (செய்யாறு) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT