திருவண்ணாமலை

அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைப்போா் மீது நடவடிக்கை திருவண்ணாமலை ஆட்சியா்

7th Oct 2022 02:39 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்போா் மீது வழக்குப் பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் எச்சரித்தது.

மாவட்டத்தில் அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனத்தினா் யாராக இருந்தாலும் டிஜிட்டல் விளம்பரப் பதாகைகளை வைக்க முறையாக அனுமதி பெறவேண்டும். சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்தில் தடையின்மை சான்று பெறுவது அவசியம். பிறகு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியில் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். தடையின்மை சான்று பெறாமலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக பணம் செலுத்தாமலும் விளம்பரப் பதாகைகள் வைப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வழக்குப் பதிவு நடவடிக்கையின் இறுதியில் ஓராண்டு சிறைத் தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சோ்த்தோ தண்டனையாக அனுபவிக்க நேரிடும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்துள்ளாா்.

இனி வரும்காலங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதன் காரணமாக ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT