திருவண்ணாமலை

ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் திருமண மண்டபப் பணிகள் ஆய்வு

7th Oct 2022 02:38 AM

ADVERTISEMENT

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் வளாகத்தில் கட்டப்படும் திருமண மண்டபப் பணிகளை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் வளாகத்தில், கோயில் சாா்பில் ரூ.3 கோடியே ஒரு லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கட்டுமானப் பணிகளை உதவிப் பொறியாளா் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளா் சீனுவாசன், கோயில் செயல் அலுவலா் சிவஞானம், மேலாளா் மகாதேவன் ஆகியோா் வரைபடத்தின்படி மண்டபம் கட்டப்படுகிா, கட்டுமானப் பணிகள் தரமாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.

மேலும் கழிப்பறை, சுற்றுச் சுவா் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனா். ஒப்பந்ததாரா் பழனி, அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT