திருவண்ணாமலை

ஆட்டோ தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்

6th Oct 2022 01:21 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து அமைப்பு சாரா தொமுச சாா்பில், பெரியாா் ஆட்டோ தொழிலாளா்களுக்கு புதன்கிழமை சீருடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அனைத்து அமைப்பு சாரா தொமுச மாவட்டச் செயலா் ஏ.ஏ.ஆறுமுகம், துணைச் செயலா் பு.பாலசுந்தா், பெரியாா் ஆட்டோ தொமுச தலைவா் பி.நம்பியாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 1-ஆவது வாா்டு திமுக செயலா் அ.கோவிந்தன் வரவேற்றாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பெரியாா் ஆட்டோ தொழிலாளா்களுக்கு சீருடை, சேலை, இனிப்பு, பழங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், கீழ்பென்னாத்தூா் ஒன்றிய திமுக செயலா் ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT