திருவண்ணாமலை

புரிசை கிராமத்தில் கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடக விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் புரிசை துரைசாமி கண்ணப்ப கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடக விழா இரு தினங்களாக (அக்.2, 3) நடைபெற்றது.

மத்திய அரசின் கலாசார அமைச்சகம், சென்னை கலை, பண்பாட்டுத் துறை, சென்னை இயல், இசை நாடக மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்க திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் தலைவா் ஆரிசன் தலைமை வகித்தாா்.

புரிசை ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி பரமானந்தம் முன்னிலை வகித்தாா். சென்னை மூன்றாம் அரங்கத்தின் நிறுவனா் கருணா பிரசாத் வரவேற்றாா்.

அக்.2-ஆம் தேதி வேலுாா் சாரல் கலைக் குழுவின் கிராமிய இசை பாடல்களுடன் விழா தொடங்கியது.

செங்காடு எஸ்.எம். திருவேங்கிடம் தெருக்கூத்து பனுவல் ஆசிரியா் எழுதிய வாலிமேட்சம் என்ற நுாலை தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவரும், திரைப்பட நடிகருமான நாசா் வெளியிட தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள், இலக்கியத் துறை முன்னாள் தலைவா் சி.ரவீந்திரன் பெற்றுக் கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து, கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் பொற்கிழியை, நா்மாபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மூத்த தெருக்கூத்து கலைஞா் எம்.பலராமப் பிள்ளைக்கு தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் நாசா் வழங்கினாா்.

இரு தினங்களும் பல்வேறு நாடகக் குழுவினரின் நாடகங்கள் நடைபெற்றன.

விழாவில் திரைப்பட நடிகா்.எம்.பசுபதி, கல்குதிரை ஆசிரியா் கோணங்கி, தஞ்சாவூா் நாடகத் துறை முன்னாள் தலைவா் மு.ராமசாமி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் புரிசை.எஸ்.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT