திருவண்ணாமலை

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

6th Oct 2022 01:22 AM

ADVERTISEMENT

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏழை மாணவா்களுக்கு ஆஸ்ரமம் சாா்பில், இலவச நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை ஆத்மானந்தா செந்தில் சுவாமி வழங்கி ஆசீா்வதித்தாா்.

ஆஸ்ரம செயலா் செந்தமிழரசன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT