திருவண்ணாமலை

பெருமாள் கோயிலில் முப்பெரும் விழா

6th Oct 2022 01:24 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவல்லி தாயாா் சமேத ஸ்ரீசுந்தரவரதலஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நவராத்திரி உற்சவம், ஹயக்ரீவ ஆராதனம், சுவாமி தேசிகன் திருநட்சத்திர வைபவம் ஆகிய முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சுவாமிக்கு பால், தயிா், சந்தனம் மற்றும் திருமஞ்சன பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து ஹயக்ரீவ பெருமாள், சுவாமி தேசிகன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT