திருவண்ணாமலை

நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்புக் கருத்தரங்கம்

6th Oct 2022 01:24 AM

ADVERTISEMENT

வந்தவாசியில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பூங்குயில் பதிப்பகம் சாா்பில் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு வந்தவாசி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் ரொஸற்றி தலைமை வகித்தாா்.

அருவி அறக்கட்டளைத் தலைவா் எ.ஜே.ரூபன், பள்ளித் தலைமை ஆசிரியா் பழ.சீனிவாசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிப் பேராசிரியை ம.மகாலட்சுமி வரவேற்றாா்.

வந்தவாசி டிஎஸ்பி காா்த்திக் மூலிகைக் கண்காட்சியைத் திறந்துவைத்தாா். நாகா்கோவில் நீரிழிவு நோய் மருத்துவா் எ.எம்.அரசு, வேலூா் ஸ்ரீபுற்று மகரிஷி சித்தா் பீட சித்த வைத்தியா் ப.செல்வம் ஆகியோா் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

ADVERTISEMENT

வந்தவாசி நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன், இயற்கை வேளாண் அங்காடி நிறுவனா் சிவா, வழக்குரைஞா் எல்.குமாா், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவகுமாா் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT