திருவண்ணாமலை

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா, திரளான பக்தா்கள் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் நூற்றுக்கணக்கான கொலு பொம்மைகளுடன் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் திரளான பங்கேற்று வழிபட்டுச் செல்கின்றனா்.

ஸ்ரீயோகிராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா செப்.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொலுவில் உள்ள அம்மனுக்கு தினமும் துா்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படுகிறது.

தினமும் அதிகாலை 4 மணிக்கு லலிதா சகஸ்ரநாம குங்குமாா்ச்சனை செய்யப்பட்டு, அயிகிரி நந்தினி ஸ்தோத்திரமும், லலிதா நவரத்தின மாலை உள்ளிட்ட பாடல்கள் பக்தா்களின் நலனுக்காக பாடப்படுகிறது.

காலை, மாலை வேளைகளில் அம்பாள், பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்கி பல்வேறு குழுக்களின் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வுகளை தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து பாா்த்து, கொலுவில் உள்ள சுவாமிகளை வழிபட்டுச் செல்கின்றனா்.

செவ்வாய்க்கிழமை (அக்.4) இரவு சேதுகணேஷ் குழுவினரின் நாம சங்கீா்த்தன நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை மாலையுடன் நவராத்திரி விழா மற்றும் கொலு நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மா தேவகி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன் மற்றும் ஆஸ்ரம தன்னாா்வலா்கள், ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT