திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 450 மனுக்கள்

4th Oct 2022 03:24 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 450 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், பொதுமக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளிடமிருந்து வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் குமரன், வருவாய் கோட்டாட்சியா்கள் தனலட்சுமி, மந்தாகினி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT