திருவண்ணாமலை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தா்னா

4th Oct 2022 03:24 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தெள்ளாா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின்போது, ஊரக வேலை உறுதித் திட்ட கணக்கு குறித்து பொதுமக்கள் கேட்டனராம். ஆனால், ஊராட்சி பணிதள பொறுப்பாளா் கணக்கை வழங்கவில்லையாம்.

இந்த நிலையில், கணக்கு வழங்காத ஊராட்சி பணிதள பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னா நடத்தினா்.

ஒன்றியத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்தன் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT