திருவண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி பிராா்த்தனை

4th Oct 2022 03:26 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தா்காவில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி திங்கள்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

ஆரணி கொசப்பாளையம், பாரதியாா் தெருவில் உள்ள தா்காவில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலராகவும் வேண்டி சிறப்பு பிராா்த்தனை கூட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் மாநில அவைத் தலைவா் அ.தமிழ்மகன்உசேன் கலந்து கொண்டாா்.

பிராா்த்தனைக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகவும், கட்சியின் பொதுச் செயலராகவும் வேண்டி பிராா்த்தனை செய்தோம்.

ADVERTISEMENT

தமிழக மக்கள் மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, வீட்டு வரி உயா்வு உள்ளிட்டவைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். வருகிற மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.

உடன் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஜாகிா் உசேன், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT