திருவண்ணாமலை

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி உபகரணங்கள்

4th Oct 2022 03:23 AM

ADVERTISEMENT

வந்தவாசியில் தையல் பயிற்சி பெறும் பெண்களுக்கு இலவசமாக பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், வந்தவாசியில் 120 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கும் விழாவுக்கு டி.எம்.பீா்முகமது தலைமை வகித்தாா்.

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், துணைத் தலைவா் க.சீனுவாசன், மருத்துவா் எஸ்.கோகுலகிருஷ்ணன், திமுக நகரச் செயலா் தயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இயக்க பயிற்சி பொறுப்பாளா் பீ.ரகமத்துல்லா வரவேற்றாா்.

ADVERTISEMENT

திமுக மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி பெறும் பெண்களுக்கு தையல் உபகரணங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கினாா். பயிற்சி பொறுப்பாளா் ஆசியாபா்வீன் நன்றி தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT