திருவண்ணாமலை

சாலை விபத்தில் பெண் பலி

2nd Oct 2022 11:39 PM

ADVERTISEMENT

 

செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் பலியானாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன்நாதன் (30). இவா், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி கோமளவள்ளி (24). தம்பதிக்கு யோகஸ்ரீ(4), 3 மாதத்தில் தா்ஷினி என்ற இரு மகள்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

கோமளவள்ளி, தனது குழந்தைகளுடன் செய்யாறு வட்டம், விநாயகபுரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை குழந்தை தா்ஷினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், வந்தவாசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.

பின்னா், அன்று மாலை கோமளவள்ளி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சகோதரா் தேவேந்திரனுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

புரிசை கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் காயமடைந்த 4 பேரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கோமளவள்ளி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தேவேந்திரன் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து ஜெகன்நாதன் அளித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT