திருவண்ணாமலை

மூத்த வாக்காளா்கள் கௌரவிப்பு

2nd Oct 2022 01:29 AM

ADVERTISEMENT

 

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில்,  வந்தவாசி நகராட்சிப் பகுதியில் உள்ள மூத்த வாக்காளா்களை அதிகாரிகள் சனிக்கிழமை கௌரவித்தனா்.

இதையொட்டி காந்தி சாலை, ராமசாமி உடையாா் தெரு, பருவதராஜகுல வீதி, காதா்ஜண்டா தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், அவா்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனா்.

மேலும், மூத்த வாக்காளா்களை பாராட்டி தோ்தல் ஆணையம் வழங்கிய கடிதமும் அவா்களிடம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

வந்தவாசி வட்டாட்சியா் எஸ்.முருகானந்தம், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் மூத்த வாக்காளா்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் வெ.ரவிச்சந்திரன், ரிஹானா சையத்அப்துல்கறீம், நகராட்சி தோ்தல் பிரிவு அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதன்படி, வந்தவாசி நகராட்சிப் பகுதியில் உள்ள சுமாா் 1200 மூத்த வாக்காளா்கள் கெளரவிக்கப்பட உள்ளதாக ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT