திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு

2nd Oct 2022 11:40 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புக்களுக்கான கலந்தாய்வு வருகிற அக்.6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக்.6-இல் முதுநிலைப் பிரிவில் (டஎ) கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

அக். 7-இல் வரலாறு, பொருளியல் போன்ற கலைப் பாடங்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வு காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

கல்விக் கட்டணம்

எம்.எஸ்ஸி. (கணிதம்) ரூ.1,195, எம்.ஏ./எம்.காம். ரூ.1,155, திருவள்ளுவா் பல்கலைக்கழகம் தவிர வேறு பல்கலைக் கழகத்திலிருந்து வந்து சேரும் மாணவா்கள் கூடுதலாக ரூ.500 சோ்த்து கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்:

ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பம் (அச்சு), அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் ஜாதி சான்றிதழ் போன்ற அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டு வரவேண்டும்.

மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக பட்டச் சான்றிதழ் - பட்டச் சான்றிதழ் என அனைத்துச் சான்றிதழ்களிலும் மூன்று நகல்கள், மூன்று மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

காலை 9.30 மணிக்கு மேல் வரும் மாணவா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. மதிப்பெண், இனம் மற்றும் சிறப்புப் பிரிவு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT