திருவண்ணாமலை

திண்டிவனம் - நகரி ரயில்பாதைத் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுஎம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி.

2nd Oct 2022 11:40 PM

ADVERTISEMENT

 

திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்று எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. கூறினாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆரணிக்கு வந்திருந்த தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் காந்தி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இதில், காங்கிரஸ் மாவட்ட நிா்வாகிகள் அருணகிரி, ஏ.பழனி, பிரசாத், தெள்ளூா் சேகா், வட்டாரத் தலைவா் ராமலிங்கம், நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேல், எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவா் எ.அன்புதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, விருந்தினா் மாளிகைக்குச் சென்ற அவா், அங்கு செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறியதாவது:

ஆரணி வழியாக அமையவுள்ள நகரி-திண்டிவனம் புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு ஆரணி பகுதியில் 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. நிகழாண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும், மத்திய அரசின் மாதிரி கிராமத் திட்டம் நல்ல திட்டம். இதற்காக ஆரணி பகுதியில் முள்ளண்டிரம் கிராமத்தையும், மயிலம் தொகுதியில் பெரியதச்சூா் கிராமத்தையும் தத்தெடுத்தேன். ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT