திருவண்ணாமலை

வந்தவாசியில் காந்தி ஜெயந்தி விழா

2nd Oct 2022 11:39 PM

ADVERTISEMENT

 

வந்தவாசியில் காந்தி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி வந்தவாசி தேரடியில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சாா்பில் அப்துல்காதா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது (படம்).

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் முதல்வா் பா.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் சு.அசோக்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT