திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அரசுக் கல்லூரி முற்றுகை, சாலை மறியல்

2nd Oct 2022 01:29 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகாா் தெரிவித்து சனிக்கிழமை கல்லூரியை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை-செங்கம் சாலையில் கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக புகாா்கள் எழுந்தன.

இந்த முறைகேட்டைக் கண்டித்தும், இனி நடைபெறும் மாணவா் சோ்க்கையை முறையாக நடத்தக் கோரியும் மாணவா்கள், பெற்றோா்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை கல்லூரி எதிரே திரண்டு கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

பின்னா் திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் திருவண்ணாமலை-செங்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், கல்லூரி மாணவ-மாணவிகள், பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் திருவண்ணாமலையில் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT