திருவண்ணாமலை

டிச.6-இல் உள்ளூா் விடுமுறை

30th Nov 2022 03:12 AM

ADVERTISEMENT

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிசம்பா் 6-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக டிசம்பா் 17-ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டது.

கருவூலங்கள் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியா்களைக் கொண்டு இயங்கும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT