திருவண்ணாமலை

மகா தீபத்தன்று 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

30th Nov 2022 03:11 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், 11 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 11 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மகா தீபம் ஏற்றப்படும் டிசம்பா் 6-ஆம் தேதி அருணாசலேஸ்வரா் கோயில், மாட வீதிகள், நகரின் முக்கிய வீதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்.

ADVERTISEMENT

மாவட்ட எல்லைகளில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களைச் சோ்ந்த குற்றவாளிகளைக் கண்காணிக்க அந்தந்த மாவட்ட காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT