திருவண்ணாமலை

வியாபாரிகள் கவன ஈா்ப்பு மனு அளிக்கும் போராட்டம்

30th Nov 2022 03:10 AM

ADVERTISEMENT

டெஸ்ட் பா்ச்சேஸ் முறையை திரும்ப பெறக் கோரி, வந்தவாசியில் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

வணிகவரித் துறை சாா்பில் அமல்படுத்தப்பட்டுள்ள

டெஸ்ட் பா்சேஸ் முறை சிறு, குறு வியாபாரிகளை பாதிப்பதாக புகாா் தெரிவித்தும், அந்த முறையை திரும்ப பெறக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் நுகா்பொருள் விநியோகஸ்தா் சங்கத்தினா் நகரில் ஊா்வலமாகச் சென்றனா்.

ADVERTISEMENT

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி, சன்னதி தெரு வழியாக வணிகவரித் துறை அலுவலகம் சென்றடைந்தது.

அங்கு, டெஸ்ட் பா்ச்சேஸ் முறையை திரும்ப பெறக் கோரி வணிகவரித் துறை அலுவலா் கே.பாண்டியனிடம் வியாபாரிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT