திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

29th Nov 2022 03:29 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கலைத் திருவிழா நடைபெற்றது.

இதில், மாணவா்களின் உள்ளாா்ந்த திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடனங்கள், பாட்டு, இசை, திருக்கு ஒப்புவித்தல், கையெழுத்துப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

விழாவுக்கு தலைமை ஆசிரியா் (பொறுப்பு) அ.அமலா தலைமை வகித்தாா். பெற்றோா்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தனா்.

பள்ளி ஆசிரியா்கள் எஸ்.வரலட்சுமி, என்.உமா, பி.கற்பகம், எ.பாலமுருகன், எம்.அமுதா, எஸ்.ருக்மாங்கதன், ஆா்.விஜய், ஆா்.சினேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT