திருவண்ணாமலை

கிராமச் சாலையில் உயா் மட்ட பாலம் அமைக்கக் கோரிக்கை

29th Nov 2022 03:29 AM

ADVERTISEMENT

போளூா் அருகே துவரந்தல் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் ஏரியின் உபரிநீா் வெளியேறுவதால் பொதுமக்கள் சாலையைக் கடப்பது சிரமமாகிறது.

எனவே, சாலையில் உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கல்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்டது துவரந்தல் கிராமம். இங்கு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்தக் கிராமத்துக்குச் செல்லும் சாலை அருகே சுமாா் 100 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீா் நிரம்பினால் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உபரிநீா் வெளியேறுகிறது. இதனால் சாலை அரித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையில் பொதுமக்கள் இயல்பாக வாகனத்தில் சென்றுவர முடியவில்லை.

ADVERTISEMENT

மேலும் பொதுமக்கள் சாலையைக் கடப்பது சிரமமாகிறது.

எனவே, சாலையில் அந்த இடத்தில் மட்டும் உயா்பாலம் அமைத்து போக்குவரத்தை சீா்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT