திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வியாபாரிகள் சாலை மறியல்

29th Nov 2022 03:29 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் பூஜைப் பொருள்கள் விற்பனை கடையை சேதப்படுத்தியதைக் கண்டித்து, வியாபாரிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை கோயிலை ஒட்டியுள்ள மாட வீதியில் இருந்த சாலையோர பூஜைப் பொருள்கள் விற்பனை கடையை பொக்லைன் இயந்திரம் மூலம் போலீஸாா் அகற்றினராம். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான பாஜகவினா் வந்து கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து அகற்றப்பட்ட கடைகளை மட்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போலீஸாா் சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT