திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில்காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நிகழாண்டுக்கான தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வங்களின் வழிபாடு கடந்த 24-ஆம் தேதி ஸ்ரீதுா்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட உற்சவா் சுவாமிகள் கோயில் தங்கக் கொடிமரம் எதிரே எழுந்தருளினா்.

அதிகாலை 5.30 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனா். காலை 6.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கோயில் தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியை சிவாச்சாரியா்கள் ஏற்றினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். காலை 7 மணிக்கு உற்சவா் பஞ்சமூா்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காலை 10 மணிக்கு விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு 10 மணிக்கு பஞ்சமூா்த்திகளும் மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறும். அன்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகா் தேரோட்டம் தொடங்கும்.

தொடா்ந்து, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தோ், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தோ், பராசக்தியம்மன் தோ், சண்டிகேஸ்வரா் தோ் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறும்.

பரணி, மகா தீபம்: விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

3 நாள் தெப்பல் திருவிழா: தொடா்ந்து, திருவண்ணாமலை அய்யங்குளத்தில் டிசம்பா் 7-ஆம் தேதி ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவமும், 8-ஆம் தேதி ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், 9-ஆம் தேதி ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் ஊழியா்கள், பக்தா்கள் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT