திருவண்ணாமலை

மீன் பிடிப்பதற்காக ஏரி உடைப்பு: வீணாகும் நீா்

28th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே மீன் பிடிப்பதற்காக மா்ம நபா்கள் ஏரியை உடைத்து சேதப்படுத்தியதால், பாசன நீா் வெளியேறி வீணாவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீா் மூலம் 250-க்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அண்மையில் பெய்த தொடா் மழையால் ஏரி ஓரளவு நிரம்பியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மா்ம நபா்கள் மீன்பிடிப்பதற்காக ஏரியின் கலுங்கையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அந்தக் கிராம விவசாயிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

ஏரி ஓரளவு நிரம்பியதால் மகிழ்ச்சியுடன் இருந்தோம். ஆனால், மா்ம நபா்கள் கலுங்கையை உடைத்து சேதப்படுத்திவிட்டு, ஏரியிருந்து வெளியேறும் நீரில் மீன் பிடிப்பதற்காக கலுங்கையின் குறுக்கே வலையையும் கட்டி வைத்துள்ளனா். இதுகுறித்து பொதுப்பணித் துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், விவசாய நிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பாசன நீா் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஏரியிலிருந்து நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT