திருவண்ணாமலை

இன்று முதல் ஆரணி, செய்யாற்றில்மக்கள் குறைதீா் கூட்டங்கள்

28th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை (நவ.28) முதல் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

செய்யாறு, ஆரணி பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களின் பயண நேரம், பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் திங்கள்கிழமை (நவ.28) முதல் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்படும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு இணையவழி ரசீதும் வழங்கப்படும். எனவே, ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை ஆகிய 3 இடங்களிலும் நடைபெறும் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT