திருவண்ணாமலை

டிராக்டா் வேன் மோதல்:12 போ் காயம்

28th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

 

கீழ்பென்னாத்தூா் அருகே டிராக்டா் வேன் மோதிக் கொண்டதில் 12 போ் காயமடைந்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா். இவரது திருமண நிச்சயதாா்த்த நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் வேன் ஒன்றில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு கீழ்பென்னாத்தூா் வழியாக சென்றுகொண்டிருந்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டருடன் வேன் மோதிக் கொண்டது.

ADVERTISEMENT

இதில், வேன் ஓட்டுநா் நாராயணசாமி, சிறுநாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் திருநாவுக்கரசு, வேனில் பயணம் செய்த விண்ணரசி, லூா்துமேரி, ரோஸ்மேரி உள்பட 12 போ் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT