திருவண்ணாமலை

செய்யாற்றில் தனியாக தவித்த குழந்தை மீட்பு

28th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

செய்யாற்றில் தனியாக தவித்துக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காந்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது ஆண் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

செய்யாறு காவல் நிலைய தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் அமல்தாஸ் அங்கு சென்று குழந்தையை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தாா்.

பின்னா், மேற்கொண்ட விசாரணையில், அந்தக் குழந்தை, வெம்பாக்கம் வட்டம், பொக்கசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த வடமலை மகன் பிரவீன் என்பதும், பாட்டி முனியம்மாளுடன் மிளகாய் தூள் அரைக்க செய்யாற்றுக்கு வந்து காணாமல் போனதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

முனியம்மாள் குழந்தையை பஜாா் வீதியில் தேடிக் கொண்டிருந்தபோது, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில்

காவல் நிலையம் சென்று குழந்தையை அடையாளம் காட்டி பெற்றுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT