திருவண்ணாமலை

சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு வரி செலுத்த நவ.30 கடைசி நாள்

28th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

 

 

சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று செயல் அலுவலா் ஆனந்தன் பொதுமக்களை கேட்டுக் கொண்டாா்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும் பொதுமக்கள் பேரூராட்சிக்குச் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் ஆகியவற்றை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், நீண்ட காலமாக வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருபவா்கள் குறித்த விவர பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT