திருவண்ணாமலை

பொது சுகாதார வளாகத்தில் நிறை, குறை புகாா்

27th Nov 2022 03:18 AM

ADVERTISEMENT

 

போளூா் பேரூராட்சியில் உள்ள பொது சுகாதார வளாகங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கைப்பேசியில் அதற்கான செயலி மூலம் நிறை, குறைகளைத் தெரிவிக்கலாம் என்று செயல் அலுவலா் கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ் உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷின் அறிவுறுத்தலின் பேரிலும் பஜாா் வீதி, பேருந்து நிலையம் பகுதி, கணபதி தெரு என பல்வேறு இடங்களில் மத்திய, மாநில அரசு சாா்பில் பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த பொது சுகாதார வளாகங்களில் சுத்தம், சுகாதாரம், தண்ணீா், மின் விளக்கு வசதிகளில் குறைபாடுகள் இருந்தால், பொதுமக்கள் தங்களது கைப்பேசி மூலம்

ADVERTISEMENT

கியூ ஆா் கோடு செயலியை பயன்படுத்தி தெரிவிக்கலாம்.

மேலும், பாராட்ட நினைத்தாலும் செயலி மூலம் தெரிவிக்கலாம் என செயல் அலுவலா் முஹ்மத் ரிஸ்வான் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT