திருவண்ணாமலை

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

27th Nov 2022 03:17 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆரணியை அடுத்த அரையாளம் காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் மணிகண்டன், நித்திஷ், ரோகித்.

இவா்கள் தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இவா்களுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளாக தெரிவித்தனா். இதனை பெறுவதற்காக தச்சூரில் உள்ள வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சைக்கிளில் தச்சூா் சென்றனா். அங்கு வங்கி விடுமுறை என்பதால் தச்சூா் பகுதியில் ஒடும் செய்யாற்றில் குளிக்கச் சென்றனா்.

தொடா் மழை பெய்து வந்த நிலையில் ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. ஆற்றில் இறங்கி மூவரும் குளித்தனா். அப்போது, மணிகண்டன் தண்ணீா் சூழலில் சிக்கினாா். உடனிருந்த மற்ற இருவா் பொதுமக்கள் உதவியுடன் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. மணிகண்டன் தண்ணீா் சூழலில் சிக்கி மூழ்கினாா்.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புப் படை வீரா்கள் வந்து ஆற்றில் தேடி மணிகண்டனை சடலமாக மீட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT