திருவண்ணாமலை

ஆரணியில் வாக்காளா் சோ்ப்பு முகாமில் ஆய்வு

27th Nov 2022 03:18 AM

ADVERTISEMENT

 

ஆரணியில் வாக்காளா்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றதை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

ஆரணி நகராட்சி 2-ஆவது வாா்டு, 3-ஆவது வாா்டு பகுதிகளுக்கு வாக்காளா் சோ்க்கை முகாம் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

4-ஆவது வாா்டுக்கான சிறப்பு முகாம் சிஎஸ்ஐ பள்ளியிலும் நடைபெற்றது.

ADVERTISEMENT

மேலும், அக்ராபாளையம், வெட்டியாந்தொழுவம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், தேவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலா் சரவணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ.கே.பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT