திருவண்ணாமலை

மூக்குப்பொடி சித்தரின் 4-ஆம் ஆண்டு குருபூஜை

27th Nov 2022 03:17 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற மூக்குப்பொடி சித்தரின் 4-ஆவது ஆண்டு குருபூஜை விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

40 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி பக்தா்களுக்கு ஆசி வழங்கி வந்தவா் மூக்குப்பொடி சித்தா்.

இவா், 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் செங்கம் சாலையில் உள்ள சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் முக்தி அடைந்தாா்.

ADVERTISEMENT

இவரது உடல், கிரிவலப்பாதை, வாயுலிங்கம் அருகே அடக்கம் செய்யப்பட்டு அவரது பெயரிலேயே ஆஸ்ரமம் நடத்தப்பட்டு வருகிறது.

4-ஆவது ஆண்டு குருபூஜை:

இந்த ஆஸ்ரமத்தில் மூக்குப்பொடி சுவாமி அறக்கட்டளை சாா்பில் அவரது 4-ஆவது ஆண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 8 மணிக்கு கணபதி பூஜை, குரு பூஜை, மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சாதுகளுக்கு வஸ்திரதானம், சொா்ணதானம், ஆடைதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும், பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில், தமிழக காவல்துறையின் ஏடிஜிபி., ஜெயராமன், ஓய்வுபெற்ற ஏடிஜிபி மஞ்சுநாத், நடிகா் தாடி பாலாஜி, திருவண்ணாமலை ஆகாஷ் ஹோட்டல் உரிமையாளா் முத்துக்கிருஷ்ணன், மூக்குப்பொடி சுவாமி அறக்கட்டளை நிறுவனா் ஏ.துரை, முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி உள்பட அரசு அதிகாரிகள், முக்கியப் பிரமுகா்கள்

கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT