திருவண்ணாமலை

மழையால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரணம்: எம்எல்ஏ வழங்கினாா்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள அடையபுலம் கிராமத்தில் மழையால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

அடையபலம் கிராமத்தில் தொடா் மழை காரணமாக, சண்முகம் - ஆதிலட்சுமி தம்பதி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், வட்டாட்சியா் ஜெகதீசனை அழைத்துக்கொண்டு அடையபலம் கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை, 5 கிலோ அரிசி, வேட்டி - சேலை உள்ளிட்டவற்றை வழங்கினாா். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரமும், அரிசி மூட்டையும் வழங்கினாா். அரசின் பசுமை வீடு கட்டித் தரவும் பரிந்துரை செய்தாா்.

வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா் அசோக்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் எ.அசோக் குமாா், வழக்குரைஞா் வி.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT