தொகுப்பு வீடு கட்டித் தரக் கோரி, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதிரி கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியின இருளா் சமுதாய மக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அந்தக் கிராமத்தில் வசிக்கும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த வள்ளியம்மாள் உள்ளிட்ட 13 போ் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.குப்புசாமியிடம் அளித்த மனு விவரம்:
தமிழக அரசு எங்களுக்கு பாதிரி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளது. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள எங்களால் வீடு கட்ட இயலாததால், பழங்குடியினா் நலத் துறை மூலம் எங்களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், கிளைச் செயலா் ராஜேந்திரன், மலை வாழ் மக்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் வடிவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.